அலட்சியத்தின் உச்சம்.. 4 குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட HIV ரத்தம் !
அலட்சியத்தின் உச்சம்.. 4 குழந்தைகளுக்கு செலுத்தப்பட்ட HIV ரத்தம் !

நான்கு குழந்தைகளுக்கு ரத்ததின் மூலம் எச்ஐவி(HIV) தொற்று பரவிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நான்கு குழந்தைகளுக்கு பிறப்பிலேயே தலசீமியா என்ற வகையைச் சேர்ந்த ரத்த சோகை பாதிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக ரத்த மாற்று சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இதற்காக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெற்று உடலில் ஏற்றியுள்ளனர். அதன்பின்னர் தான் நான்கு குழந்தைகளுக்கும் எச்ஐவி தொற்று பரவியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை தரப்பில் அதிகாரிகள் கூறுகையில், 4 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தவறுசெய்தவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றார்.

அதேபோல் உணவு மற்றும் மருந்துகள் ஆணையமும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் விக்கி ரூக்வானி இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சிகிச்சையின் போது இவர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ரத்த வங்கியில் பெற்ற ரத்ததின் மூலம் இவர்களுக்கு எச்ஐவி மற்றும் ஹெப்பாடிடிஸ் பி பாதிப்பு பரவியுள்ளது. பொதுவாக சிகிச்சைக்காக குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்துவதற்கு முன்னர் அந்த ரத்தம் NTA பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஆனால், ரத்த வங்கியில் இந்த பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால், இந்த குழந்தைகள் எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிட்டார்.
newstm.in

