Theme Check

மூடநம்பிக்கையின் உச்சம்.. பேயை விரட்ட சிறுமி கொலை.. அண்ணன் - தம்பிக்கு ஆயுள்..!

மூடநம்பிக்கையின் உச்சம்.. பேயை விரட்ட சிறுமி கொலை.. அண்ணன் - தம்பிக்கு ஆயுள்..!

மூடநம்பிக்கையின் உச்சம்.. பேயை விரட்ட சிறுமி கொலை.. அண்ணன் - தம்பிக்கு ஆயுள்..!
X

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா கியாதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீனா. இவருடைய மகள் பூர்விகா (3).

இந்த சிறுமி அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான அண்ணன் - தம்பிகளிடம் பூர்விகாவை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மந்திரவாதிகள், பூர்விகாவுக்கு பேய் பிடித்துள்ளது; தடியால் அடித்தால் பேய் ஓடிவிடும் எனக் கூறி, ஒரு குடிசைக்குள் சிறுமியை கூட்டிச் சென்று தடியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி நடந்தது. மூடநம்பிக்கையால் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிக்க ஜாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மந்திரவாதிகள் 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 2 மந்திரவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி பிரபாவதி உத்தரவிட்டார்.
Next Story
Share it