அமுலுக்கு வந்த திட்டம்..!! மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10
அமுலுக்கு வந்த திட்டம்..!! மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ரூ.10

மலை பிரதேசங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது.

மேலும், பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும், தவறினால் மலை பிரதேசங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் கடந்த மே 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 10 மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் பின்னர் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்து, ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

