ஓடுதளத்தில் சென்றபோது தீப்பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்- பகீர் வீடியோ !!

ஓடுதளத்தில் சென்றபோது தீப்பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்- பகீர் வீடியோ !!

ஓடுதளத்தில் சென்றபோது தீப்பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்- பகீர் வீடியோ !!
X

அண்மைக்காலமாக விமான விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. சீனாவில் சமீபத்தில் சென்ற விமானம் ஒன்று மலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அங்கு நடந்த விபத்தில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதாவது, சீனாவின் சாங்கிவிங் விமான நிலையத்தில் இருந்து திபெத்திய ஏர்லைன் நிறுனத்தை சேர்ந்த விமானம் ஒன்றும் பறப்பதற்காக ஓடுதளத்தில் வேகமாக சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென விமானம் தீப்பிடித்து எரிந்தது. எனினும் சுதாகரித்த விமானி உடனே விமானத்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கினார்.

asd

சாங்கிங் ஜியங்பெய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாசாவிற்கு செல்ல இருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஒருசிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடுதளத்தில் விமானம் தீப்பற்றி எரியும் வீடியோ வைரலாகி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it