தொழிற்சாலை மீது மோதி சிதறிய விமானம்.. பயணித்தவர்கள் அனைவரும் பலி!!

தொழிற்சாலை மீது மோதி சிதறிய விமானம்.. பயணித்தவர்கள் அனைவரும் பலி!!

தொழிற்சாலை மீது மோதி சிதறிய விமானம்.. பயணித்தவர்கள் அனைவரும் பலி!!
X

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜெனரல் மில்ஸ் ஆலை மீதே விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து குறித்து மத்திய விமானப்போக்குவரத்துறை நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, உள்ளூர் நேரப்படி இரவு 7.05 மணிக்கு விபத்து நடந்தது.

சிறிய ரக விமானம் ஒன்று ஆலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவிங்டன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில், விமானத்தில் உடனடியாக கோளாறு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அது ஆலை மீது மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர்பிழைக்கவில்லை என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம், ஆலையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்துகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it