Theme Check

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 5 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்த போலீஸ்!!

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 5 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்த போலீஸ்!!

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 5 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்த போலீஸ்!!
X

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் 5 கிலோ மீட்டர் துரத்திப் பிடித்து கைது செய்தனர்.

வேளச்சேரியில் கடந்த 17ஆம் தேதி, நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், மேலும் இரண்டு இடங்களில் செயின் பறிப்பு முயற்சி சம்பவங்களும் நடந்தது.

இது தொடர்பாகவும் காவல்நிலையத்தில் புகார்கள் வந்தது. இதையடுத்து வேளச்சேரி போலீஸார் செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஒரே கும்பல் அனைத்து இடங்களிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

chain

இதையடுத்து வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே தனிப்படை போலீஸார் சென்று கொண்டிருந்தபோது, சி.சி.டி.வி காட்சியில் பதிவான இருசக்கர வாகனம் அவ்வழியாகச் சென்றதைக் கண்டு அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தனர்.

போலீஸார் பின் தொடர்வதைக் கண்ட அவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றனர். போலீஸார் விடாமல் சினிமா பட பாணியில் சுமார் 5 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள்தான் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

chain

இருவரும் சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்கீம்(24), கண்ணகி நகரை சேர்ந்த ஜான் பாஷா என்பதும், அவர்கள் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் நீலாங்கரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(22) என்பவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பறிப்பில் ஈடுபட பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்து மேலும் மூன்று பேரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Next Story
Share it