Theme Check

வாக்குச்சாவடிக்கு ஒரே மாடலில் புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ் !!

வாக்குச்சாவடிக்கு ஒரே மாடலில் புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ் !!

வாக்குச்சாவடிக்கு ஒரே மாடலில் புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ் !!
X

வாக்கு அளிக்க பெண்கள் உதயசூரியன் சின்னம் பொறித்த புடவை அணிந்து வந்ததால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 26வது வார்டு பகுதியில் வாக்கு அளிக்க வந்த பெண்களை காவல்துறையினர் திருப்பி அணிப்பு வேறு உடை அணிந்து வர அறிவுறுத்தினர்.

girl dmk

அதாவது, வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த சில பெண்கள், உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்து வந்திருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அப்பெண்களை உடனே தடுத்து நிறுத்தினர். தேர்தல் விதிப்படி சின்னம் பொறித்த எவ்வித பொருட்களுடனும் அனுமதி கிடையாது என கூறி, பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

இதற்கு அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் வேறு உடை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என போலீசார் கூறியதையடுத்து அவர்கள் திரும்பிச்சென்றனர். இதனால் வாக்குச்சாவடியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Next Story
Share it