Theme Check

இளம்பெண்ணை தனிமைக்கு அழைத்த காவலர்.. பொளத்துகட்டிய உறவினர்கள் !

இளம்பெண்ணை தனிமைக்கு அழைத்த காவலர்.. பொளத்துகட்டிய உறவினர்கள் !

இளம்பெண்ணை தனிமைக்கு அழைத்த காவலர்.. பொளத்துகட்டிய உறவினர்கள் !
X

பெண்ணை செல்போன் மூலம் தனிமைக்கு அழைத்த காவலருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இவர் தனது காதலருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுப்பிரமணி(38), காதலர்கள் இருவரையும் பார்த்துள்ளார். பின்னர் இருவரிடமும் விசாரணை செய்து செல்போன் எண்ணை பெற்றுள்ளார்.

attack

இந்த நிலையில், நேற்று காவலர் சுப்பிரமணி, அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளார். அப்போது மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து, பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், காவலர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். காவலரின் அநாகரிக செயலும், காவலரை கிராமத்தினர் தாக்கியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it