ஒரு சிப்ஸ்-ன் விலை ₹1.63 லட்சமாம் ..!!
ஒரு சிப்ஸ்-ன் விலை ₹1.63 லட்சமாம் ..!!

நாம் எல்லோருக்கும் தின்பண்டங்கள் மேல் எப்போதும் அலாதி பிரியம் உண்டு. குறிப்பாக விதவிதமாக கிடைக்கும் சிப்ஸ், பிஸ்கட், சாக்லேட் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.சிப்ஸ் வகைகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சிப்ஸ் இ-பே எனப்படும் ஆன்லைன் வணிக தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இங்கிலாந்தில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ.132 ஆக இருக்கும் நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஒற்றை சிப்ஸை ரூ.1.63 லட்சத்திற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளார். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.அந்த சிப்ஸ்-ன் வடிவம் மிகவும் தனித்துவமாக இருந்ததால் இவ்வளவு விலை நிர்ணயித்துள்ளாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story

