பிரச்சினை தொடங்கியது.. 4ஆம் வகுப்பு மாணவிக்கு சரமாரி அடி.. ஆசிரியை மீது போலீசில் புகார்
பிரச்சினை தொடங்கியது.. 4ஆம் வகுப்பு மாணவிக்கு சரமாரி அடி.. ஆசிரியை மீது போலீசில் புகார்

வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் பள்ளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மாணவர்கள் இடையே மோதல் சம்பவம் நடந்துவிட்டது. அடுத்து வீட்டுப்பாடம் பிரச்சனையும் எழுந்துள்ளது. சென்னை கொரட்டூரில் உள்ள எல்சடாய் பள்ளியில் 4ஆம் வகுப்பில் தமிழ் ஆசிரியை பார்வதி வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் வீட்டுப்பாடம் எழுதிவந்து கொடுத்துள்ளனர்.

ஆனால், மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் எழுதவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை பார்வதி, வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை கை மற்றும் காலில் கம்பால் அடித்துள்ளார். இதில் மாணவிக்கு கை மற்றும் காலில் காயம் எற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை பார்வதி மீது மாணவியின் தந்தை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிதுள்ளார்.
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளார். தனியார் பள்ளியில் நடந்தாலும் அடுத்தடுத்து அரசு பள்ளியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில் அரசு வழிமுறைகளை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

