Theme Check

பெண்ணின் கண்ணில் குச்சியை சொருகிவிட்டு தப்பிச் சென்ற சைக்கோ!!

பெண்ணின் கண்ணில் குச்சியை சொருகிவிட்டு தப்பிச் சென்ற சைக்கோ!!

பெண்ணின் கண்ணில் குச்சியை சொருகிவிட்டு தப்பிச் சென்ற சைக்கோ!!
X

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள டக்லா என்ற கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் கணவர் தற்போது டெல்லியில் வேலை பார்த்து வருவதால், தனது 8 வயது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இரவு வழக்கம்போல், வீட்டிற்குள் அவரும், அவரது மகளும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவு தட்டப்படும் சத்ததை கேட்ட அந்த பெண் எழுந்து கதவை திறந்துள்ளார்.

அப்போது வெளியில் இருந்து வந்த மர்ம நபர் பெண்ணை ஒருவர் கீழே தள்ளிவிட்டு, கயிற்றை கொண்டு அவரை கட்டி போட்டு, அவரது கண்ணில் ஒரு குச்சியை கொண்டு குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

kidnap 1

இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில் எம்.டி சமீம் என்பவரை கைது செய்து இது பாலியல் வன்கொடுமைக்காக செய்யப்பட்ட குற்றமா என்று விசாரித்து வருகின்றனர்.

கண்ணில் குச்சியை வைத்து குத்தியதால், அந்த பெண்ணுக்கு பார்வை கிடைக்குமா என்பது சந்தேகமே என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it