Theme Check

பொதுமக்கள் இனி நேரில் வரத் தேவையில்லை.. மே 1 முதல் புதிய முறை அமல்..!

பொதுமக்கள் இனி நேரில் வரத் தேவையில்லை.. மே 1 முதல் புதிய முறை அமல்..!

பொதுமக்கள் இனி நேரில் வரத் தேவையில்லை.. மே 1 முதல் புதிய முறை அமல்..!
X

கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி அலுவலகங்களுக்கு நேரில் வரத் தேவையில்லை. தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டிட அனுமதி முறை அமலுக்கு வருகிறது.

எனவே, கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி அலுவலகங்களுக்கு நேரில் வரத் தேவையில்லை. உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையில் அனுமதி பெறலாம்.

அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். முதற்கட்டமாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இதை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்’ என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it