Theme Check

அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களை நடுவழியில் இறக்கி விட்ட ரயில்வே அதிகாரி..!!

அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களை நடுவழியில் இறக்கி விட்ட ரயில்வே அதிகாரி..!!

அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களை நடுவழியில் இறக்கி விட்ட ரயில்வே அதிகாரி..!!
X

தேசிய அளவிலான அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சேலம் மாவட்டத்தை சார்ந்த வீரர்களை தங்களின் விளையாட்டு உபகரணங்களை காரணம் காட்டி கொல்லம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விட்டு அவமரியாதை செய்த கேரள ரயில்வே அதிகாரி நடுவழியில் இறங்கி விட்டதால் வீரர்கள் தவித்தனர்.

சேலம் மாவட்டத்தை சார்ந்த முத்து அதெலடிக் வீரர் உட்பட 4 வீரர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த பஸ்ட் ஓப்பன் நேஷனல் அதெலடிக் போட்டியில் கலந்து கொண்டு 6வது இடம் பிடித்ததாகவும் உடன் வந்தவர்கள் தங்கம், உட்பட பல பதக்கங்களை பெற்று விட்டு தங்கள் விளையாட்டு உபகரணங்களோடு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல ரயிலில் தங்கள் உபகரணங்களை ஊருக்கு கொண்டு செல்ல ரயில் ஜன்னல் ஓரம் வெளிப்புறமாக கட்டி வைத்துள்ளனர்.

Kerala-Railway-official-who-dropped-TN-Athletic-players

பின்னர் ரயில் புறப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வந்தபோது டிக்கெட் பரிசோதகர் உபகரணங்களை ஜன்னலில் கட்டிவந்த காரணத்தை காட்டி, கொல்லம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வீரர்கள் சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக தங்களது விளையாட்டு உபகரணங்களை இப்படியே எடுத்து செல்வதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளனர்.

Next Story
Share it