Theme Check

செல்போனால் வந்த வினை.. எலி மருந்து தின்ற பிளஸ் 2 மாணவி பலி..!

செல்போனால் வந்த வினை.. எலி மருந்து தின்ற பிளஸ் 2 மாணவி பலி..!

செல்போனால் வந்த வினை.. எலி மருந்து தின்ற பிளஸ் 2 மாணவி பலி..!
X

புதுச்சேரி, திருபுவனை அடுத்த சிலுக்காரிப்பாளையம் மயிலம் பாதையில் வசிப்பவர் தங்கதுரை. இவருடைய மகள் ஷகி (16). இவர், திருபுவனையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

மாணவி ஷகி, வீட்டில் இருக்கும் நேரங்களில் படிக்காமல், அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஷகி நீண்ட நேரம் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனால் அவருடைய தாய் புஷ்பவதி, “பாடங்களை படிக்காமல் எப்போது பார்த்தாலும் செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாயே” எனக் கண்டித்து, செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார்.

இதனால் வேதனை அடைந்த மாணவி ஷகி, வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றுள்ளார். இரண்டு நாள் கழித்து அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் தாய் புஷ்பவதி விசாரித்தபோது, எலி மருந்து தின்றதை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் ஷகியை சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ஷகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் பரமசிவம் அளித்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it