Theme Check

புதுவீட்டுக்கான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய கொள்ளையர்கள்!!

புதுவீட்டுக்கான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய கொள்ளையர்கள்!!

புதுவீட்டுக்கான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய கொள்ளையர்கள்!!
X

கேரளாவில் புது வாடகை வீட்டிற்கு தேவையான சோப்பு, சீப்பு , கண்ணாடி உட்பட பல பொருள்களை லிஸ்ட் போட்டு திருடிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சூரில், பரவட்டாணி என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில் கடந்த 1 ஆம் தேதி வீட்டு சாதனங்களை திருடிய மூன்று திருடர்கள் கேரள போலீசாரிடம் சிக்கினர்.

அவர்கள் தாங்கள் புதிதாக குடியேறியுள்ள வாடகை வீட்டிற்கு சோப்பு, சீப்பு கண்ணாடி, உட்பட எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததன் பின்பு கைது செய்தனர்.

kl theft

கைது செய்யப்பட்ட மூவரும் புது வீட்டிற்கு தேவையான பொருட்களை, லிஸ்ட் போட்டு மூவராக சேர்ந்து திருடி ஆட்டோவில் கடத்தியுள்ளனர்.

கடையிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபகரண பொருட்களை திருடியதுடன் கல்லாப்பெட்டியில் இருந்த மூவாயிரம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டில் பறவூர் பகுதியைச் சார்ந்த அருண், கோழிக்கோடு பகுதியை சார்ந்த ஆரிப், பெரிச்சல் பகுதியை சார்ந்த விஜீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

Next Story
Share it