நாட்டையே உலுக்கிய கோரம்.. கள்ளச்சாராயம் குடித்து பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
நாட்டையே உலுக்கிய கோரம்.. கள்ளச்சாராயம் குடித்து பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள பொடாட் மாவட்டத்தில் அதற்கு ஒட்டிய அகமதாபாத் மாவட்டத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு சிலர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து 40க்கும் அதிகமானவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிலர் மயங்கிய நிலையிலும், வாந்தி எடுத்தும், பலரால் எழுந்திருக்க கூட முடியாத நிலையிலும் காணப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சுமார் 30 பேர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
newstm.in