Theme Check

விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த போது தீப்பிடித்த திரை!!

விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த போது தீப்பிடித்த திரை!!

விக்ரம் படம் ஓடிக்கொண்டிருந்த போது தீப்பிடித்த திரை!!
X

விக்ரம் திரையிடம் ஓடிக் கொண்டிருந்த போது தியேட்டரின் திரை திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்தவர்கள் அச்சத்தில் தியேட்டரை விட்டு வெளியேறினர்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

screen fire

இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்துக் கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாக, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it