#BREAKING :- கடையை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. சுவரில் துளை போட்டு 30 கிலோ நகைகள் கொள்ளை..!
#BREAKING :- கடையை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. சுவரில் துளை போட்டு 30 கிலோ நகைகள் கொள்ளை..!

காட்பாடி அருகே, அடகுக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அடகுக் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு, அங்கு அடகு பிடிக்கப்பட்டிருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காட்பாடி அருகே சேர்காடு கூட்டுச் சாவடியில் இந்துமதி என்பவரின் அடகுக் கடையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.
இன்று காலை கடையை திறக்க வந்த கடை உரிமையாளர், கடைக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன், அங்குள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளை நடைபெற்ற கடை மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அடகுக் கடையில் இருந்து 750 கிராம் தங்க நகைகள் மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதன் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

