தன்னை கடித்த பாம்புடன் ஆம்புலன்ஸில் சென்ற பாம்புபிடி வீரர்!!

தன்னை கடித்த பாம்புடன் ஆம்புலன்ஸில் சென்ற பாம்புபிடி வீரர்!!

தன்னை கடித்த பாம்புடன் ஆம்புலன்ஸில் சென்ற பாம்புபிடி வீரர்!!
X

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் பாம்பு இருப்பதை கண்ட சேகர் என்பவர், உடனடியாக வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரி சேகரின் வீட்டுக்கு பாம்பு பிடிக்க சென்றார். இந்நிலையில் பாம்பு புகுந்த தகவலறிந்து அம்பத்தூரில் அனைவராலும் அறியப்படும் பாம்பு பிடி வீரர் கணேசன் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றார்.

அங்கு வீட்டின் படிக்கட்டுக்கு பின்புறம் பதுங்கி இருந்த இரண்டரை அடி நீளம் இருந்த நல்ல பாம்பை பிடித்து, சாக்குப்பையில் போடும் பொழுது, அந்த பாம்பு அவரின் கைவிரலில் கடித்ததாக கூறப்படுகிறது.

snake-catcher

அதனைத் தொடர்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, அதில் ஏறி, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவர் பிடித்த நல்ல பாம்பையும் ஆம்புலன்சிலேயே எடுத்து சென்றார்.

ஆம்புலன்சில் முதலுதவியாக கணேசனுக்கு ஊசி போடப்பட்டது. இந்நிலையில், பாம்பு கடித்தவுடன், நாகமணி வேர் பொடி உட்கொண்ட தாகவும், அது சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது எனவும், அதை சாப்பிட்டால் பாம்பு விஷம் முறிந்து எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it