உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி அடக்கம் செய்த மகன்..!!
உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்ட் பூசி அடக்கம் செய்த மகன்..!!

சென்னை நீலாங்கரை பகுதியில் மூதாட்டி செண்பகம் (86) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டும் மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் சுரேஷ், இவர் வசிக்கும் அதே வீட்டின் மேல்தளத்தில் வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் இவருடைய மூத்த மகன் பாபு, தாயார் செண்பகத்திடம் தொலைபேசியில் பேச கடந்த சில தினங்களாக முயற்சித்துள்ளார். அப்போது, அவர் கடைக்கு சென்றிருப்பதாகவும், உறங்கிகொண்டிருப்பதாகவும் தம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பாபு, வீட்டிற்கு நேரடியாக சென்று சுரேஷிடம் விசாரித்துள்ளார். பயந்துபோன சுரேஷ், தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல், உயிரிழந்த தாயாரை ட்ரம்மில் போட்டு, சிமெண்ட் பூசி மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாபு, உடனடியாக நீலாங்கரை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த செண்பகத்தின் உடலை ட்ரம்முடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேதபரிசோதனை முடிவுக்கு பிறகே, உடல்நலக்குறைவால் செண்பகம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

