தாயை கொன்று ரூ.700-ஐ திருடிச்சென்ற மகன் !!
தாயை கொன்று ரூ.700-ஐ திருடிச்சென்ற மகன் !!

மொபைல் போன் வாங்கித் தராததால் கோபமடைந்த மகன் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் மைல சந்திராவில் பாத்திமா மேரி (50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தோட்டங்களில் கீரைகள், காய்கறிகள் வாங்கி வந்து விற்பனை செய்து குடும்பத்தை வழிநடத்தி வந்தார்.
இவரது மகன் தீபக் (26) ஜூன் 1ஆம் தேதி மாலை மைல சந்திராவின் தோட்டத்தில் கீரை வாங்கி வர தாயும், மகனும் சென்றனர். அப்போது தனக்கு புது செல்போன் வாங்கித்தரும்படி தாயிடம் கேட்டார். அதற்கு தாய் மறுத்துள்ளார். மேலும், தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்றார்.

இதனால் இருவருக்கும் அங்கேயே வாக்குவாதம் நடந்தது. அப்போது வாய்தகராறு முற்றியதில், கோபமடைந்த மகன், தாயின் சேலையால் அவரது கழுத்தை நெரித்தார். இதில் நிலைக்குலைந்த தாய் பாத்திமா மேரி அங்கேயே மூச்சுதிணறி உயிரிழந்தார். தாயை கொலை செய்த மகன் தீபக் அங்கிருந்து தப்பியோடினார். தாயை கொன்ற சோகம் கொஞ்சமும் இல்லாமல் அவரிடம் இருந்த 700 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது தாயை அவரது மகன் கொலை செய்தது உறுதியான நிலையில் தீபக்கை கைது செய்தனர்.‘
newstm.in

