Theme Check

இன்றும் கொளுத்திய வெயில்.. 5 இடங்களில் சதம்.. மக்கள் அவதி !!

இன்றும் கொளுத்திய வெயில்.. 5 இடங்களில் சதம்.. மக்கள் அவதி !!

இன்றும் கொளுத்திய வெயில்.. 5 இடங்களில் சதம்.. மக்கள் அவதி !!
X

தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் இந்த ஆண்டில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. ஏப்ரல் மாதத்திலும் நாளொன்றுக்கு குறைந்தது 4 பகுதிகளிலாவது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகிவருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

heat

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

அதிபட்சமாக மதுரை நகரில் 39.1 செல்சியஸ் (102.48 ஃபாரன்ஹீட் டிகிரி) வெயில் பதிவானது. அடுத்ததாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39 செல்சியஸ் (102.2 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகியிருந்தது. மதுரை விமான நிலையத்தில்38 செல்சியஸ் (100.4 ஃபாரன்ஹீட் டிகிரி), ஈரோட்டில் 38.6 ( 101.48 ஃபாரன்ஹீட் டிகிரி), திருச்சியில் 37.9 செல்சியஸ் (100.22 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியது.


newstm.in

Next Story
Share it