Theme Check

சரமாரியாக தாக்கிய ஆசிரியர்.. சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன் !!

சரமாரியாக தாக்கிய ஆசிரியர்.. சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன் !!

சரமாரியாக தாக்கிய ஆசிரியர்.. சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன் !!
X

பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தனியார் டியூசன் சென்டர் இயங்கிவருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டியூசன் மையத்தில் ஆசிரியராக இருக்கும் சோட்டு என்பவர் இன்று காலை மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்போ அனைவரையும் படிக்குமாறு கூறிவிட்டு அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். இதில் 5 வயது சிறுவன் ஒருவன், படிக்காமல் பக்கத்தில் இருந்த மற்றொரு சிறுவனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த டியூசன் ஆசிரியர் சோட்டு, அந்த சிறுவனை தாக்கினார். அதாவது தான் கையில் வைத்திருந்த பிரம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். பிரம்பு இரண்டாக உடைந்த பிறகும் விடாமல், சிறுவனின் தனது கைகளால் முகத்தில் குத்தியுள்ளார். இதனால் சிறுவன் மயக்கமடைந்தான்.
xcv
இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு வந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அதோடு, மாணவரை தாக்கிய ஆசிரியர் சோட்டுவையும் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிறுவனை ஆசிரியர் சோட்டு தாக்கும் வீடியோவை அங்கிருந்த ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it