Theme Check

மதுவால் ஏற்பட்ட விபரீதம்.. தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பாசக்கார மகன்..!

மதுவால் ஏற்பட்ட விபரீதம்.. தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பாசக்கார மகன்..!

மதுவால் ஏற்பட்ட விபரீதம்.. தந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பாசக்கார மகன்..!
X

சிங்கம்புணரி அருகே, மது அருந்த பணம் கொடுக்காத தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (59). இவருடைய மகன் முகுந்தன் (23).

டிப்ளமோ படித்துள்ள இவர் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். அத்துடன், தினமும் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நேற்றிரவு (23-ம் தேதி), வழக்கம்போல் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்திய முகுந்தன், மேலும் மது அருந்த தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் இல்லை என்று கூறவும் அவரை அடித்து உதைத்துள்ளார். பின்னர், உடல்நலக்குறைவால் படுத்திருந்த தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன், தந்தை செல்வத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிங்கம்புணரி போலீசார், முகுந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Next Story
Share it