Theme Check

முதலிரவில் நடந்த விபரீதம்.. இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு !!

முதலிரவில் நடந்த விபரீதம்.. இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு !!

முதலிரவில் நடந்த விபரீதம்.. இளம் தம்பதி எடுத்த விபரீத முடிவு !!
X

நெல்லையைச் சேர்ந்த சக்திவேல் (22) என்ற இளைஞர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கும், உறவினர் மகள் ஆர்த்தி (20) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. இருவரும் சென்னையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சக்திவேலை உறவினர்கள் நீண்ட நேரம் செல்போனில் தொடர்பு கொண்டபோதும் பதிலளிக்கவில்லை. இதனால், ஆர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். இருவரும் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததோடு, நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் இதுபற்றி மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

dfs

அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சக்திவேலும், ஆர்த்தியும் ஒரே மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரது சடலத்தையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்தபோது, தற்கொலை செய்வதற்கு முன், சக்திவேல் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், ‘குழந்தை பிறக்க தேவையான முக்கிய நரம்பு உடைந்து போனதால், என்னால் குழந்தை பெற முடியாது. இதனால், நாங்களே எங்கள் சாவை முடிவு செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. குழந்தை பெற இயலாது என்ற காரணத்தால் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்கிறோம், என்று
எழுதியிருந்தது.

மேலும் விசாரணையில், திருமணத்திற்கு பிறகு சக்திவேல், மனைவி ஆர்த்தியுடன் முதலிரவின்போது, சக்திவேலின் முக்கிய நரம்பு அறுந்துவிட்டதாகவும், இதற்காக அவர்கள் சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளனர். அதன் பிறகு அவர்களால் சரியாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும் இயலவில்லை என்றும், இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களாகவே முடிவு செய்து மிகுந்த மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

திருமணமான 6 மாதத்திலேயே இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it