Theme Check

விபத்தில் சிக்கி தானாகச் சென்ற இருசக்கர வாகனம்.. வீடியோ

விபத்தில் சிக்கி தானாகச் சென்ற இருசக்கர வாகனம்.. வீடியோ

விபத்தில் சிக்கி தானாகச் சென்ற இருசக்கர வாகனம்.. வீடியோ
X

கோவை குறிச்சி பகுதியின் ஒரு வழிப்பாதையில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார்.

இதில் கல்லூரி மாணவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தின் போது வியக்கவைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

dsad

அதாவது, விபத்தின்போது மாணவன் மட்டும் பைக்கில் இருந்து கீழே விழுந்தாலும், இரு சக்கர வாகனம் மட்டும் நிற்காமல் சில அடி தூரம் தானாகச் சென்றது. எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சிறிது தூரம் சென்று கீழே விழுந்தது.

விபத்து மற்றும் இரு சக்கர வாகனம் தானாகச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


newstm.in

Next Story
Share it