கல்யாணம் செஞ்சிகிட்டா மணமக்களுக்கு ரூ. 1.67 லட்சம் பரிசு..! எந்த நாட்டில் தெரியுமா..?
கல்யாணம் செஞ்சிகிட்டா மணமக்களுக்கு ரூ. 1.67 லட்சம் பரிசு..! எந்த நாட்டில் தெரியுமா..?

மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் வெகுமதியாக வழங்குவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி லாசியோவாகும். இத்தாலியின் தலைநகர் ரோம், லாசியோ பகுதியில் தான் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா வணிகங்களை புதுப்பிக்கும் வகையில் இந்த அறிவிப்பை இத்தாலி அரசு வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ‘அன்புடன் லாசியோவிலிருந்து’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லாசியோ பகுதியில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு இத்தாலி அரசு 2 ஆயிரம் யூரோக்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரு. 1.67 லட்சம்.
கடந்த திங்கள் கிழமை முதல் இதற்கான விண்ணப்பங்கள் தொடங்கி உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை அல்லது இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முடியும் வரையில் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.