கணவனையும், அவரது கள்ளக்காதலியையும் அரை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி !!
கணவனையும், அவரது கள்ளக்காதலியையும் அரை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி !!

மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனையும், அவரது காதலியையும் அரைநிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற மனைவியின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஃபர்சகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அது உறுதியாக தெரியாததால் உண்மையை கண்டுபிடிக்க அவரே களத்தில் இறங்கினார்.

அதன்படி தனது கணவர் எப்போதும் அடிக்கடி செல்லும் இடத்தைதெரிந்துகொண்டு கடந்த ஜூன் 11 அன்று அங்கு சென்று சோதனை இட்டிருக்கிறார்.
அப்போது அங்கு அவரது கணவரும், அதேபகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆத்திரமுற்ற அந்நபரின் மனைவி, இருவரையும் கையும் களவுமாக பிடித்து கடுமையாக தாக்கியிருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் அடிக்கடிஇங்கு தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண், தனது கணவரையும் அவரது கள்ளக்காதலியையும் அரைநிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கிறார். இதனை அக்கிராமத்தினர் வேடிக்கை பார்த்ததோடு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பரப்பியிருக்கிறார்கள். அதோடு உறவினர்கள் சிலர் அப்பெண்ணுடன் சேர்ந்துகொண்டு இருவரையும் தாக்கியுள்ளனர்.

அந்நபரின் தோளில் பெரிய கம்பையும் கட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். அது தொடர்பான வீடியோ வைரலானதை அறிந்த போலீசார் சம்பவ
இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பேரில் சம்பவம் நடந்ததை உறுதிசெய்த போலீசார் கணவனையும், அவரது கள்ளக்காதலியையும் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக மனைவி உட்பட நால்வரையும் கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகேன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் இப்போது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
newstm.in

