இணையத்தில் கணவரை ஏலம் விட்ட மனைவி!!
இணையத்தில் கணவரை ஏலம் விட்ட மனைவி!!

சொந்த கணவரை மனைவி ஒருவர் ஆன்லைனில் விற்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த லிண்டா என்ற பெண் தனது கணவர் ஜான் இரண்டு குழந்தைகளுடன் வெளியே சென்றியிருந்த நிலையில், ‘trade me’ என்ற இணையதளத்தில் தனது கணவரை விற்கப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டா.
அந்த அறிவிப்பு பதிவை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்தார். அந்தப் பதிவில், “என் கணவர் 6.1 அடி உயரம் இருப்பார். 37 வயதாகிறது. மிகவும் நல்லவர். மீன் பிடிக்கச் செல்வது அவருடைய பொழுதுபோக்கு என குறிப்பிட்டிருந்தார்.

எனது கணவரை ஏலத்திற்கு விடுகிறேன் எனத் தெரிவித்து, கண்டிசனில் பயன்படுத்தப்பட்டது என்றும் ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அருகில் இருப்பவர்கள் வாங்கினால் இலவசமாக டெலிவரி செய்வேன் என குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் வேறு எந்தப் பகுதியாக இருந்தாலும் ஃப்ரீ ஷிப்பிங் செய்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியவர அவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லிண்டா இதனை விளையாட்டாக செய்ததாக அவரது கணவர் ஜான் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக இனைந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in

