Theme Check

வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை தெறிக்க விட்ட மனைவி!!

வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை தெறிக்க விட்ட மனைவி!!

வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை தெறிக்க விட்ட மனைவி!!
X

கணவன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை அறிந்த மனைவி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்து அதிரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரைச் சேர்ந்த டாக்டர் பானு பிரகாஷ் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானு பிரகாஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக இருந்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Judge

ஆனால் அவருடைய மனைவி, கணவரை பிரிய மனம் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மருத்துவர் பானு பிரகாஷ், வேறு ஒரு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனை அறிந்த மனைவி தனது உறவினர்களுடன் அங்கு சென்று கணவருக்கு தர்ம அடி கொடுத்தார். மேலும் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Affair

டாக்டரின் திருமணத்தின்போது 10 லட்ச ரூபாய் பணமும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. வரதட்சணையாக கிடைத்த பணம், நகை ஆகிய அனைத்தையும் அவர்களே வைத்துக் கொண்டனர். இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு தன்னை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுவிட்டார் என்று முதல் மனைவி கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய கணவர் அதன் பின்னர் வீட்டுக்கு வருவதில்லை என்றும் தற்போது தன்னிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it