Theme Check

குடும்பம் நடத்த வராத மனைவி.. மாமனாரை தீர்த்துக்கட்டிய இளைஞர் !!

குடும்பம் நடத்த வராத மனைவி.. மாமனாரை தீர்த்துக்கட்டிய இளைஞர் !!

குடும்பம் நடத்த வராத மனைவி.. மாமனாரை தீர்த்துக்கட்டிய இளைஞர் !!
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாகைத்தாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தனகுமார் (36) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், விவசாய கூலி வேலைக்குச் சென்று வந்த சந்தனகுமார், கடந்த சில மாதங்களாக மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லமால் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு கூறியும் கணவர் கேட்காததால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தனகுமார் பலமுறை அழைத்தும் ஜெயா வர மறுத்து விட்டார். இந்நிலையில் நேற்று மாலை சந்தனகுமார், தனது மனைவி ஜெயாவை குடும்ப நடத்த அனுப்பி வைக்கும்படி மாமனார் மந்திரத்திடம் கேட்டுள்ளார். இதற்கு தனது மகளின் முடிவுதான் தன்னுடைய முடிவு என்று மந்திரம் கூறியதாக தெரிகிறது.

f

இதனால் ஆத்திரமடைந்த சந்தனகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மந்திரத்தை வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மந்திரம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மந்திரம் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தனகுமாரை கைது செய்தனர். மனைவி குடும்பம் நடத்த வரவில்லை என்ற ஆத்திரத்தில் மருமகன், மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


newstm.in


Next Story
Share it