குடும்ப விசேஷத்தில் உறவினர்களை வீடு புகுந்து தாக்கிய பெண்! வீடியோ!!
குடும்ப விசேஷத்தில் உறவினர்களை வீடு புகுந்து தாக்கிய பெண்! வீடியோ!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அந்தேவணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் (32) - ஷில்பா தம்பதிக்கு 2014இல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சித்தராஜ் சலூன் கடை நடத்தி வருகிறார்.
ஷில்பாவுக்கு வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது தெரிந்து சித்தராஜ் மனைவியை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால், ஷில்பா தொடர்ந்து அந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
இதனால் ஷில்பாவை வீட்டை விட்டு போய்விடுமாறு சித்தராஜ் கூறிவிட்டார். ஷில்பா பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சித்தராஜ் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் அவரது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சித்தராஜ் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சித்தராஜின் மனைவி ஷில்பா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என வீட்டிற்குள் நுழைந்து உருட்டுகட்டைகளை கொண்டு பொருட்களை உடைத்து நாசம் செய்தனர்.
சித்தராஜின் உறவினர்களிடம் கடும் தகராறில் ஈடுபட்டு அவர்களையும் தாக்கினர். சித்தராஜின் தம்பி ரகு (32) மற்றும் அவரது அண்ணி கவிதா உள்ளிட்டவர்களை அடித்து தாக்கிவிட்டு ஷில்பா உடன் வந்த கும்பல் பெங்களூரு தப்பிச் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே தகாத உறவால் வீட்டைவிட்டு சென்ற பெண் கணவரின் கிரகப்பிரவேச வீட்டில் கும்பலுடன் வந்து தகராறில் ஈடுபட்ட சம்பவம்; #crime #Viral pic.twitter.com/kjixOarStM
— Divakar (@divakarMathew) February 7, 2022
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

