அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்.. போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன் !!
அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்.. போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன் !!

மதுரை கோ.புதூர் மகாலட்சுமி நகரைச் சோந்த தேவராஜ் என்பவரின் மனைவி பிரசன்னா தேவி. இவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. இளம்பெண்கள், திருமணமான பெண்கள் பலரும் இவரது வலையில் சிக்கி தவித்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து போலீசார் சில நாட்களாக ரகசியமாக கண்காணித்து விசாரணை நடத்தி வந்தனர். அன்போரில் அவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. இதனையடுத்து அதிரடியாக சோதனை நடத்திய போலீசார் பிரசன்னா தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த இளம்பெண்கள் சிலரையும் மீட்டுள்ளனர்.

விசாரணையில், வறுமையில் சிக்கித் தவிக்கும் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது அம்பலமானது. இவரிடம் மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் பிரசன்னா தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பிரசன்னா தேவியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதன் பேரில் போலீசார் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசன்னா தேவியிடம்
இதற்கான ஆணையை காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
newstm.in

