கிஃப்ட் வாங்குவது போல் நடித்து நகையைப் பறித்த பெண்!!
கிஃப்ட் வாங்குவது போல் நடித்து நகையைப் பறித்த பெண்!!

கோவையில் காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸி ஸ்டோரில் புகுந்து நகையை பறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ரத்தினபுரி ஏழாவது வீதியில் செல்வராணி என்பவர் சண்முகா பேன்ஸி என்ற கடையை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் காதலர் தினத்திற்கு வழங்க கிப்ட் வேண்டும் என சில பொருட்களை வாங்கியுள்ளார்.
பொருட்களை கடை உரிமையாளர் செல்வராணி பேக்கிங் செய்து கொண்டு இருந்த போது, கிப்ட் வாங்க வந்த பெண் தனது பையில் மறைத்து வைத்திருந்த, கரப்பான்பூச்சியை கொல்லும் ஹிட் ஸ்பிரேவை எடுத்து வயதான பெண்ணின் முகத்தில் அடித்தார்.
அதில் மயக்கமடையாத செல்வராணி கூச்சலிடவே, அவரை கீழே தள்ளி விட்டு செல்வராணி கழுத்தில் அணிந்து இருந்த 7.5 சவரன் நகையை பறித்து விட்டு அந்த பெண் தப்பிஓடினார். செல்வராணியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து ஓடினார்.
கோவை ரத்தினபுரி பேன்ஸி கடையில் காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து, வயதான பெண்ணின் முகத்தில் HIT ஸ்பிரே அடித்து நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இறுதி வரை போராடிய வயதான பெண் பொதுமக்கள் உதவியுடன் திருடியை பிடித்தார். @News18TamilNadu pic.twitter.com/PlF0MMNSuD
— Gurusamy (@gurusamymathi) February 12, 2022
தப்பியோடிய அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து ரத்தினபுரி போலீசாரிடம் ஓப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அந்த பெண்ணின் பெயர் தெய்வந்தி என்கிற தமிழ்மணி என்பதும் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சிறிது நாட்களாக அதே பகுதியில் இந்த பெண் தங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த ரத்தினபுரி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

