தள்ளாடிய ‘சரக்கு’ வேன் கவிழ்ந்தது.. போட்டி போட்டு அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்..!
தள்ளாடிய ‘சரக்கு’ வேன் கவிழ்ந்தது.. போட்டி போட்டு அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள்..!

மதுரையில், மதுபானம் ஏற்றி வந்த சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை கவிழ்ந்ததில், சாலையில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்களை மதுப்பிரியர்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.
மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று மதுரை மாநகருக்கு வந்துகொண்டிருந்தது.
இந்த வேன், விரகனூர் சுற்றுச்சாலை அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வாகனத்தில் இருந்த மதுபான பெட்டிகள் அனைத்தும் ரோட்டில் விழுந்து உடைந்ததால் சாலையில் மதுபானம் ஆறாக ஓடியது.
மதுபானம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்ததைப் பார்த்த அந்த சாலையில் சென்ற மதுப்பிரியர்கள் ஓடோடி வந்து சிதறிக் கிடந்த மது பாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீசார், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

