Theme Check

காதலியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!!

காதலியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!!

காதலியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!!
X

கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவருக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆதியனேந்தலை சேர்ந்த உதயகுமார் (28) கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அவர் அதே கல்லூரியில் படித்த மதுரையை சேர்ந்த சோனாலி (21) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.

உதயகுமார் கல்லூரிக்கு சரிவர வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. இதனால் சோனாலி உதயகுமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சோனாலி வகுப்பறைக்கு நுழைந்த உதயகுமார் அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினார்.

Karur-accquest

தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ்குமாரை தாக்கி, மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து மாணவியை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு, ஆபாசமாக திட்டியதற்காக 3 மாத சிறை, ட்டையால் தாக்கியதற்காக 2 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

newstm.in

Next Story
Share it