குளித்த பெண்ணை வீடியோ எடுத்த இளைஞர்.. கைக்கு காப்பு மாட்டிய காவலர்கள்..!
குளித்த பெண்ணை வீடியோ எடுத்த இளைஞர்.. கைக்கு காப்பு மாட்டிய காவலர்கள்..!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நிரவி நடுகளம் பேட் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் திலீப் குமார் (21). இவர், அந்தப் பகுதியில் பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர், நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை தேடி வந்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த திலீப்குமார், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது, பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதியானது. நேற்று சிகிச்சை முடிந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

