Theme Check

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்.. அப்புறம் நடந்த கும்மாங்குத்து !!

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்.. அப்புறம் நடந்த கும்மாங்குத்து !!

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞர்.. அப்புறம் நடந்த கும்மாங்குத்து !!
X

உருளையன் பேட்டையில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், ஆண்கள் மனத்தில் மாற்றம் ஏற்படவேண்டும், இதற்கு பெற்றோர் தங்கள் ஆண் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கி உள்ளது.

எனினும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தப்பாடில்லை. அந்த வகையில், புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் குளிப்பதை குளியலறையில் உள்ள ஓட்டை வழியாக பக்கத்து வீட்டை சேர்ந்த தினகரன் (24) என்பவர் பார்த்துள்ளார். மேலும் அப்பெண் குளிப்பதை செல்போன் மூலமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

cellphone

இதுகுறித்து அந்த பெண் உடனடியாக குளியலறையை விட்டுவெளியே சென்றுவிட்டார். மேலும் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர். பெண் குளித்ததை வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it