Theme Check

இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!

இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!

இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை!!
X

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞர் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டார்.

இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என அந்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

அதன் பின்னர் அந்த இளைஞர் மேலும் சில முறை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று தனது நண்பர்கள் 3 பேரை வைத்து அந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Rape

இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்த நிலையில், அந்த இளைஞர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். மேலும் அடுத்த நாள் அந்த பெண்ணை அந்த இளைஞர்கள் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அந்த பெண்ணை கடுமையாக அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து அந்த பெண் தியோபந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it