Theme Check

மிரட்டி நண்பனின் மனைவியை ரேப் செய்த இளைஞர்.. கணவரும் சிக்கினார் !!

மிரட்டி நண்பனின் மனைவியை ரேப் செய்த இளைஞர்.. கணவரும் சிக்கினார் !!

மிரட்டி நண்பனின் மனைவியை ரேப் செய்த இளைஞர்.. கணவரும் சிக்கினார் !!
X

செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைதானார். அப்பெண்ணின் கணவரும் சிக்கினார்.

சென்னையில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் குடியேறி வசித்து வருகின்றனர். இதில் பலர் வேலைக்கு சென்று குடும்பத்தை வழிநடத்தி வந்தாலும் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த தர்போக் உசைன் (28) மற்றும் அவருடைய நண்பர் காலித் ஹசன் (24) இருவரும் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமான தர்போக் உசைன், அதே மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி 2ஆவது திருமணம் செய்துகொண்டு குரோம்பேட்டை அழைத்துவந்துள்ளார்.

rape

அங்கு, தனது நண்பர் காலித் ஹசன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து தர்போக் உசைன் மற்றும் சிறுமி ஆகியோர் கணவன்- மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். அப்போது நண்பர் காலித் ஹசன் அவ்வப்போது அவர்களின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அப்படி சென்றுவந்த அவர், நண்பனின் மனைவி என்றும் பாராமல் சிறுமி குளிப்பதை செல்போனில் ஆபாசமாக வீடியோ காலித் ஹசன் வீடுயோ எடுத்துள்ளார். ஒருநாள், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. தொடர் பாலியல் தொல்லையால் நடந்ததை சிறுமி தனது கணவரிடம் கூறினார்.

rape

பின்னர் அவர்கள் அளித்த புகாரின்பேரில், தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காலித் ஹசனை கைது செய்தனர். அப்போத விசாரணையில் தர்போக் உசைன் சிறுமியை திருமணம் செய்திருந்ததும் அம்பலமானது. இதனையடுத்து சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த தர்போக் உசேனும் கைது செய்யப்பட்டார். சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

newstm.in


Next Story
Share it