Theme Check

அருவியில் செல்பி எடுத்த இளைஞர் தவறி விழுந்து பலி !!

அருவியில் செல்பி எடுத்த இளைஞர் தவறி விழுந்து பலி !!

அருவியில் செல்பி எடுத்த இளைஞர் தவறி விழுந்து பலி !!
X

வேலுார் மாவட்டம் ஜவ்வாது மலையில் அமர்தி சிறு வன உயிரியல் பூங்கா அருகே அமர்தி அருவி உள்ளது. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். அதேபோல் அருவியில் குளித்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்வர்.

இந்த நிலையில் வேலுார் விருதம்பட்டை சேர்ந்த முக்தர்சி (21) தனது நண்பர்கள் ஐந்து பேருடன் அங்கு சென்றுள்ளார். பூங்காவில் சுற்றிப்பார்த்து விளையாடிய அவர்கள் அருவிக்கு செல்லமுயன்றனர். ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிக்கு செல்ல வனத்துறையினரின் தடை விதித்துள்ளனர்.

amirthi falles

இதனால், பைக்கை மறைவான பகுதியில் நிறுத்திவிட்டு அவர்கள் அனைவரும் அருவிக்கு நடந்து சென்றனர். அருவி மீது நின்று ஐந்து பேரும், மொபைல் போனில் 'செல்பி' எடுத்தனர். அப்போது, முக்தர்சி தவறி விழுந்து சேற்றில் சிக்கினார். நண்பர்கள் சேர்ந்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

பின்னர் அவர்களின் தகவல் படி, வனச்சரகர் முருகன் தலைமையிலான ஊழியர்கள் சென்று அவரை தேடினர். ஆனால் முக்தர்சியை சடலமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜமுனாமரத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in


Next Story
Share it