Theme Check

திருட்டுத்தனமாக வெடிகுண்டு தயாரிப்பு.. திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்..!

திருட்டுத்தனமாக வெடிகுண்டு தயாரிப்பு.. திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்..!

திருட்டுத்தனமாக வெடிகுண்டு தயாரிப்பு.. திமுக பிரமுகரின் தம்பி படுகாயம்..!
X

வீட்டில், திருட்டுத்தனமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென வெடித்ததில் திமுக பிரமுகரின் தம்பி படுகாயம் அடைந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன். இவர், மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராகவும், ஒன்றாவது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.

இவருடைய தம்பி இசக்கிமுத்து என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் இசக்கிமுத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, இசக்கிமுத்துவின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவருடைய வீட்டில் வெடிக்காத குண்டுகள் இருப்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தொடங்க இருக்கின்றனர்.

Next Story
Share it