Theme Check

அன்று குன்றத்தூர், இன்று குமரி.. கள்ளக்காதலுக்காக குழந்தைகளுக்கு விஷம் வைத்த கார்த்திகா..!

அன்று குன்றத்தூர், இன்று குமரி.. கள்ளக்காதலுக்காக குழந்தைகளுக்கு விஷம் வைத்த கார்த்திகா..!

அன்று குன்றத்தூர், இன்று குமரி.. கள்ளக்காதலுக்காக குழந்தைகளுக்கு விஷம் வைத்த கார்த்திகா..!
X

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (34). இவரது மனைவி கார்த்திகா (21). இவர்களுக்கு மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
குழந்தைகளை கொல்ல உப்புமாவில் விஷம் வைத்த கொடூர தாய்!
இந்நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப் பொடியை சாப்பிட்டு மயக்கம் அடைந்ததாக, கூலி வேலைக்கு சென்றிருந்த ஜெகதீஷுக்கு கார்த்திகா தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஜெகதீஷ், குழந்தை சரணை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை உயிரிழந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குழந்தையின் பெற்றோரை காவல் நிலையம் கூட்டிவந்து விசாரணை மேற்கொண்டனர்.
காதலுக்கு இடையூறு.. சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம்  குழந்தையை கொன்ற கொடூர தாய்!
அப்போது, தாய் கார்த்திகாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் அழிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போனுக்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பதும், காப்பிக்காடு - மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில்ராஜ் என்பவருடன் கார்த்திகா அதிகநேரம் பேசியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சுனில்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திகாவுக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் அவருடன் பழகியதாகவும், அதுகுறித்து தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கார்த்திகா அளித்த வாக்குமூலத்தில், கோவில் திருவிழா ஒன்றில் சுனில்ராஜை பார்த்து காதலில் மூழ்கியதாகவும், இரண்டு குழந்தைகளை கொன்றால் அவன் ஏற்றுக் கொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கணவனிடம் கூறி விஷ பொடியை வாங்கி வரச் செய்திருக்கிறார்.
காதலுக்கு இடையூறு.. சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம்  குழந்தையை கொன்ற கொடூர தாய்!
அந்த விஷப் பொடியை குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்புமாவில் கலந்து கொடுத்ததில் சரண் இறந்ததாகவும், பெண் குழந்தை உப்புமா குறைவாக சாப்பிட்டதால் தப்பித்துக் கொண்டது என்றார். அந்த விஷயம் தாமதமாக தெரிய வரவே, அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து வருகிறது.

திருமணத்தை மீறிய உறவால் பச்சிளம் குழந்தையின் உயிரை பெற்ற தாயே பறித்த சம்பவம் குளக்கச்சி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story
Share it