Theme Check

சரக்கு அடிக்கிறதுக்கு ஒரு அளவு வேணும்... இல்லாமல் போனதால் பறிபோன இளைஞரின் உயிர்..!!

சரக்கு அடிக்கிறதுக்கு ஒரு அளவு வேணும்... இல்லாமல் போனதால் பறிபோன இளைஞரின் உயிர்..!!

சரக்கு அடிக்கிறதுக்கு ஒரு அளவு வேணும்... இல்லாமல் போனதால் பறிபோன இளைஞரின் உயிர்..!!
X

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜவாதி ராமாராவ் ஆச்சாரி (32) என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் அவிநாசியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர், மது அருந்தியுள்ளார்.

Avinasi

மது போதை மிக அதிகமானதால், அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு நிதானமின்றி பின்நோக்கி வளைந்தவாறு தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி திருப்பூரிலிருந்து சேயூர் நோக்கி சென்ற அரசு நகர பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்தார்.

பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைபற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Avinasi

மேலும், அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில், போலீசார் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த இளைஞர் மது போதையில் தடுமாறி விழுந்த பதற வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it