Theme Check

தூத்துக்குடியில் பரபரப்பு..!! கடலில் பழுது நீக்கும் பணி செய்த இளைஞர் பலி!

தூத்துக்குடியில் பரபரப்பு..!! கடலில் பழுது நீக்கும் பணி செய்த இளைஞர் பலி!

தூத்துக்குடியில் பரபரப்பு..!! கடலில் பழுது நீக்கும் பணி செய்த இளைஞர் பலி!
X

தூத்துக்குடியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சம்ராஜ் (27), இவர், தூத்துக்குடி, துறைமுக கப்பலில் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு ஸ்டார்க் என்ற கப்பல் வந்தது.

அந்த கப்பலில் பழுது நீக்கும் பணிக்காக சாம்ராஜ் மற்றும் கண்ணன் என்பவரும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடல் தண்ணீருக்குள் மூழ்கி சென்று கப்பல் புரப்பல்லரில் சிக்கி இருந்த வலை, கயிறு போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாம்ராஜ் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

harbour

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சாம்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாம்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சம்ராஜ் உறவினர்கள் கூறுகையில், 400 மீட்டர் ஆழத்தில் இறங்கி வேலை பார்க்கு சாம்ராஜ் வெறும் 4 மீட்டர் அளவிலே நேற்று வேலை பார்த்துள்ளார். ஆனால் இவர் இறந்ததாக கூறுகின்றனர். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

dead-body

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story
Share it