Theme Check

அவர்களிடம் கோடிகளில் பணம் உள்ளது, கொள்கை கிடையாது.. அதிமுகவை தாக்கிய சீமான் !!

அவர்களிடம் கோடிகளில் பணம் உள்ளது, கொள்கை கிடையாது.. அதிமுகவை தாக்கிய சீமான் !!

அவர்களிடம் கோடிகளில் பணம் உள்ளது, கொள்கை கிடையாது.. அதிமுகவை தாக்கிய சீமான் !!
X

மத்திய அரசு அறிவித்துள்ள அக்னி பத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும், 17 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் போன்ற சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் அப்போது கடும் வன்முறை வெடித்தது. பல ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் இந்த திட்டம் ஆபத்தானது என எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்தன.

SEEMAN

இந்த நிலையில், மத்திய அரசின் அக்னி பத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் நடப்பது சொந்தகட்சி பிரச்சினை. இதில் எந்த சார்பு நிலையும் நாங்கள் எடுக்கமுடியாது. நாங்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாலோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாலோ எங்களுக்கு என்ன பலன் இருக்கப்போகிறது? நாங்கள் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரோ, பொதுக்குழு உறுப்பினரோ கிடையாது.

SEEMAN

இது அவர்கள் கட்சி பிரச்சினை, அவர்கள் பேசி தீர்த்துகொள்ள வேண்டும். அதில் சிலர் இந்தப்பக்கம் இருப்பார்கள், சிலர் அந்தப்பக்கம் இருப்பார்கள். நாங்களும் அந்த பிரச்சினையை கவனித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் பணம் மட்டும் தான் உள்ளது. வேறு என்ன இருக்கிறது? கோடிகள் பல இருக்கிறது, கொள்கை கிடையாது, என அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it