Theme Check

திருமுருகன் காந்தி திடீர் கைது.. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

திருமுருகன் காந்தி திடீர் கைது.. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

திருமுருகன் காந்தி திடீர் கைது.. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
X

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன், நினைவு தினத்தையொட்டி, மே 17 இயக்கம் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால், தடையை மீறி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மீது, தடையை மீறி கூட்டம் நடத்த முயன்றதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிகவின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமுருகன் காந்தி, “மிகவும் அமைதியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” எனத் தெரிவித்தார்.

Next Story
Share it