“இந்த சென்னை வீரர் தான் தோனிக்கு தலைவலியே” : ஹர்பஜன் அதிரடி!!
“இந்த சென்னை வீரர் தான் தோனிக்கு தலைவலியே” : ஹர்பஜன் அதிரடி!!

சென்னை அணியின் கேப்டன்சி விவகாரத்தில் தோனிக்கு, ரவீந்திர ஜடேஜா தலைவலியாக இருப்பதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியநிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பதவியேற்றார்.
முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3ஆவது போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணி மோசமாக பேட்டிங் செய்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ஜடேஜா கேப்டன்சி குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் விமர்சனம் செய்துள்ளார். களத்தில் இப்போதும் தோனியே கேப்டனாக செயல்படுகிறார். ஜடேஜா, தனக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லாததை போன்று பவுண்டரி லைனில் நின்று பீல்டிங் செய்து வருகிறார்.
பவுண்டரி லைனில் நின்று பீல்டிங் செய்தால் எந்த கேப்டனாலும் தனது அணியை வழிநடத்த முடியாது. இதனால் தோனிக்கு தான் தேவையற்ற தலைவலி என்றே தோன்றுகிறது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஜடேஜா இதுபோன்று தனது சுமையை மற்றவர் மீது சுமத்திவிட்டு விட்டு இருக்கக்கூடாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
newstm.in

