Theme Check

சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்பட இயக்குநர் இவர்தான்! அறிவித்தது சன் பிக்சர்ஸ்!!

சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்பட இயக்குநர் இவர்தான்! அறிவித்தது சன் பிக்சர்ஸ்!!

சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்பட இயக்குநர் இவர்தான்! அறிவித்தது சன் பிக்சர்ஸ்!!
X

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்தப்படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியை யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கிறார், பால்கி இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் என்றனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

rajini

இருப்பினும் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் குழப்பத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில் ரஜினியின் அடுத்தப்படமான தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

Next Story
Share it