கே.என்.நேரு மனைவியை இப்படித்தான் கொஞ்சுவார்.. முதல்வர் ஸ்டாலின் ‘கலகல’..!
கே.என்.நேரு மனைவியை இப்படித்தான் கொஞ்சுவார்.. முதல்வர் ஸ்டாலின் ‘கலகல’..!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மகன் மகன் விநீத்நந்தன் – அக்ஷயா திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில், மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கட்டத்தில், “அமைச்சர் நேரு, தன்னுடைய மனைவியைக்கூட கோபமாகத்தான் கொஞ்சுவார்” என்று ஜாலியாக கமென்ட் அடிக்க, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
Next Story

